உலக மக்களை பாடாய் படுத்திய கொரோனாவை பரப்பியது சீனாதான்: அடித்துக் கூறுகிறது அமெரிக்கா
சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் லீக் ஆனதாக மீண்டும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், 2020, 2021ம் ஆண்டுகளில் உலக மக்களை பாடாய் படுத்தியது.
தற்போது கொரோனா வைரஸ் பீதி அடங்கியுள்ள நிலையில், சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக பலநாடுகளும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் எரிசக்தி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘சீனாவில் உள்ள வுகான் ஆய்வகத்தில் இருந்து கோவிட்-19 வைரஸ் கசிந்தது. கொரோனா வைரசின் தோற்றம் குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.
*சீனா மறுப்பு வுகானில் உள்ள உயிரியல் ஆய்வகத்திலிருந்து கோவிட்-19 வைரஸ் கசிந்திருக்கலாம் என்று கூறும் புதிய அமெரிக்க அறிக்கையை சீனா மீண்டும் நிராகரித்தது. கொரோனா தொற்று பரவியது அறிவியல் தொடர்பானது. இதை அரசியலாக்க மாற்றக்கூடாது. என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார்.
Post a Comment