Header Ads



இதுதான் உண்மையான ரணில், 22 வருடங்களுக்கு முன்னரே எமக்குத் தெரியும்


நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் சொல்ல முடியாத ரணில் இன்று -26- டுவிட்டரில் விளக்கம் கொடுக்கின்றார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


தமிழ்தேசிய மக்கள் முன்னணின் தேர்தல் பரப்புரை முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை பகுதியில் (26.02.2023) இன்று மாலை நடைபெற்றுள்ளது.


இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


மேலும் கூறுகையில்,ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்து ஜனநாயகத்தினை கேள்விக்குறியாக்கும் நிலையில் தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.


அந்த கருத்துக்கு பலத்த விமர்சனங்கள் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படுகின்ற நிலையில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் அவர் நீண்ட விளக்கத்தினை கொடுத்துள்ளார்.


அதில் உள்ளுராட்சி தேர்தலை தான் மறுப்பதற்கான காரணம் சட்டரீதியானது என்பதை விளங்கப்படுத்த முயற்சித்துள்ளார்.


தேர்தல் நடத்தமுடியாது என்பது காசு ஒதுக்கப்படாமல் இருப்பது அனைத்தும் சட்டவிரோதம். ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் அரசியல்வாதிகளின் கையில் இருக்க முடியாது ஒரு நம்பகத்தன்மையினை கொண்டதாக இருந்தால் அதனால்தான் தேர்தல் திணைக்களம் என்றும் சுயாதீன கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


அந்த கட்டமைப்பு தேர்தல் நடக்கவேண்டும் என்று முடிவெடுக்குமாக இருந்தால் ஆட்சியில் இருக்கக்கூடிய எவரும் வந்து அந்த முடிவினை கேள்விக்குட்படுத்தாமல் தேவைப்படும் நிதியினை ஒதுக்கியாக வேண்டும்.


அனைத்தினையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் ரணில் விக்ரமசிங்க நடந்துக்கொள்ளும் சூழ்நிலையில் இந்த விளக்கம் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்.


அது எங்கள் மக்களுக்கோ சிங்கள மக்களுக்கோ விளங்குவதான விளக்கம் அல்ல. அது சர்வதேசத்திற்கு மார்ச் மாதம் ஜ.நா மனித உரிமை பேரவையில் அமர்வுகள் தொடங்கி நடைபெறுகின்றது. நிச்சயமாக இலங்கை யு.பி.ஆர். என்ற சுழற்சி என்ற ஆய்வில் இலங்கை ஆய்வு செய்யப்பட்டு அதனது அறிக்கை ஐ.நா மனித உரிமை பேரவையில் பேசப்படும்.


தங்கள் அணியினை காப்பாற்றுவற்காக ஜனநாயகத்தினையே கேள்விக்குட்படுத்தி தேர்தல் நடத்தாத வகையில் நிதியினை முடக்கி அவருடைய ஜனநாயக விரோத செயற்பாடுகள் அம்பலமாகி கொண்டிருக்கும் நிலையில் ஏதோ ஒருவகையில் தன்னை நியாயப்படுத்துவதற்காக ஒரு ஜனாதிபதி டுவிட்டர் ஊடாக தன்னுடைய விளக்கத்தினை கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்.


நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் சொல்லமுடியாமல் ஒரு ஜனாதிபதி பதவியின் பெறுமதியினை காப்பாற்ற முடியாத நிலைக்கு அவர் நிலமை காணப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க இன்றுதான் இந்த போகம் எடுத்துள்ளார் அல்ல என்பது உண்மை .இது தான் உண்மையான ரணில் இவரின் பண்புகளை தமிழர்கள் நாங்கள் 2001 ஆம் ஆண்டு நன்கு அறிந்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.