Header Ads



2 நாளேயான சிசுவை 75.000 ரூபாய்க்கு விற்க முயன்ற 3 குழந்தைகளின் தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை


பிறந்து இரண்டு நாளேயான சிசுவை, ரூ.75,000-க்கு விற்க முயன்றதற்காக, மூன்று குழந்தைகளின் தாயான 46 வயதுடைய தாய்க்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வியாழக்கிழமை (05) விதித்தார்.


குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக அதிகாரி ஒருவருக்கு அந்த தாய், தனது குழந்தையை விற்க முயன்றுள்ளார்.


இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 360(2)-இன் கீழ் குற்றம் சாட்டி, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.


சிறைத் தண்டனைக்கு கூடுதலாக, ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தப்படாவிட்டால், மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் நீதிபதி விதித்தார்.  

No comments

Powered by Blogger.