Header Ads



உடலுறவு உள்ளிட்ட 4 குற்றச்சாட்டு, அவுஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலக்க கைது


தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சமூகவலைத்தளம் ஊடாக தனக்கு அறிமுகமான 29 வயது பெண் ஒருவரையே, தனுஷ்க குணதிலக்க பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


அனுமதியின்றி உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.