Header Ads



வாயால் நுரை வெளியேறி, மூக்கால் சுவாசிக்க முடியாது 800 மாடுகள் உயிரிழப்பு


- கனகராசா சரவணன்  -


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் நோய் காரணமாக தினமும் 10 மாடுகள் வீதம் சுமார் 800 மேற்பட்ட மாடுகள் வயல்வெளி, குளம் மற்றும் காட்டை அண்டிய பகுதிகளான மேச்சல் தரை பகுதிகளில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக கால் நடை வளர்ப்பாளர்கள் கடும் கவலையை தெரிவித்துள்ளனர்.


சித்தாண்டி மற்றும் கிரான் கால்நடை திணைக்களப் பிரிவுகளான சந்தனமடு ஆற்றுப்பகுதியை அண்டிய பகுதியான சித்தாண்டி 4 ஆம் பிரிவு, ஈரளக்குளம், ஆலையடி, சேரடி, வேறம்  பெரியவெட்டை, மற்றும் வட்டுவான், வெள்ளா மைச்சேனை, கூளாவடி, கோரவெளி, மாதந்தனை, மயிலந்தனை மேச்சல் தரை போன்ற பிரதேசங்களில் ஒருவயது தொடக்கம் ஒன்றரை வயது வரையிலான எருமை மாடுகளும் பசுமாடுகளும் நோய் தாக்கத்தினால் உயிரிழந்துவருகின்றன.


இது தொடர்பாக கால்நடை திணைக்கள அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு மாரடைப்பால் சுவாசிக்க முடியாது மாடுககள் இறந்துவருதவதாக தெரிவித்து அதற்கான தடுப்பூசி ஏற்றி வருகின்றனர்.  


இருந்தபோதும் தடுப்பூசிகள் ஏற்றிய பின்னரும் மாடுகள் வாயால் நுரை வெளியேறி மூக்கால் சுவாசிக்க முடியாது இறந்து வருவதாகவும், சுமார் இருவாரங்களில் 800 க்கு மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் கால் நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 


No comments

Powered by Blogger.