Header Adsஅலி சப்ரிக்கு மீண்டும் பழைய பதவியா..?


(எம்.எப்.எம்.பஸீர்)


நிதி அமைச்சராக மீண்டும் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றியை நியமிக்க அரசாங்கம் ஆரம்பகட்ட இணக்கமொன்றுக்கு வந்துள்ளது.  


புதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஐவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குனவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோருக்கு இடையே நடந்த சிறப்பு கலந்துரையாடலில் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.


அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சு தவிர வேறு எந்த அமைச்சுப் பதவிகளையும் வகிக்க முடியாது. அதன்படி, சமர்ப்பிக்கப்படும் வரவுச் செலவு திட்டத்தை மையப்படுத்தி அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.


அதன்போது, வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளை அமுல்ச் செய்வது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்புகளையும் பேச்சுவார்த்தையையும் முன்னோக்கி எடுத்துச் செல்வது போன்ற பிரதான பொறுப்புக்களை  ஒப்படைத்து நிதி அமைச்சை அலி சப்றியிடம் மீள கையளிப்பது தொடர்பில் அவதானம் திரும்பியுள்ளது.


இதனைவிட, புதிதாக  5 அமைச்சரவை அமைச்சுக்களை  ஏற்படுத்த அவதானம் திரும்பியுள்ளதுடன்,  பொது ஜன பெரமுன கட்சியின் மூவருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரபலம் ஒருவரும் உள்ளடங்கலாக ஐவருக்கு அவற்றை வழங்கவும் ஆரம்பகட்டமாக பேசப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.


வீரகேசரி

1 comment:

  1. நீதிமன்றங்களில் வழக்காடி சம்பாதிக்கும் திறன் அலி சப்ரிக்கு இருக்கின்றது. ஆனால் நிர்வாகம், குறிப்பாக நிதி நிர்வாகத்தில் அவருக்கு எந்த அனுபவமும் இல்லை. அதுபோல முக்கியமான மேலைத்தேய, மத்திய கிழக்கு நாடுகளில் நெருங்கிய உறவைப் பேணி காரியம் சாதிக்கும் திறன் இவருக்கு அறவே கிடையாது. ஆள்பார்வையால் காரியம் சாதிப்பார் என்ற இலங்கையர்களின் மடத்தனம் மீண்டும் அரங்கேற இருக்கின்றது. வௌிநாட்டுத் தலைவர்களோடு மிக நெருங்கிய உறவைப் பேணி முன்னாள் வௌிநாட்டு அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீத் அவர்கள் காரியம் சிறப்பாகச் சாதித்தார்கள். அதுபோல முன்னாள் வௌிநாட்டு அமைச்சர் திரு கதிர்காமர் அவர்கள் அவருயை ஆழமான அறிவுத் திறன், நுணுக்கமான மிகவும் சாமர்த்தியமான இராஜதந்திர அறிவின் நுட்பத்தினால் மிகத் திறமையாகக் காரியம் சாதித்தார்கள். அவருக்கு முதலில் நாடும் நாட்டு மக்களின் எதிர்காலமும் என்பது தான் முதல் தென்பட்டது. ஆனால் இந்த தலைவர்களிடமிருந்த பண்பும், அறிவும் அனுபவமும் இந்த நபரிடம் ஒரு கடுகளவேனும் இல்லை. யார் யாரையோ திருப்திப்படுத்துவதும் அதற்காக என்ன தந்திரத்தையும் மேற்கொள்வதும் கள்வர்களைச் சுற்றிவைத்துக் கொண்டு எந்த இலக்கோ, ஞானமோ இன்றி இலக்கு இல்லாமல் ஓடித்திரியும் எலிபோல கோட்டையும் டையையும் அழகாக அணிந்துகொண்டு நாட்டின் பொறுப்பான பதவிகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற முடியாது, மக்களின் திட்டு பதுவாவுடன் இறுதியில் ஏக்கமும் ஏமாற்றமும் தான் இவர் எதிர்நோக்க இருக்கின்றார் என்பதை இந்த நபர் எப்போது விளங்கிக் கொள்வார் என்பது கடவுள்தான் அறிவார்.

    ReplyDelete

Powered by Blogger.