Header Ads



பாக்கிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நிதி சேகரிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா


'وَيُـؤْثِرُوْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ؕ وَمَنْ يُّوْقَ شُحَّ نَـفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ'ۚ ‏(سورة الحشر 09)


அல்லாஹுதஆலா அல்குர்;ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்: 'மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். (59:09)



கடந்த ஜூன் மாதத்திலிருந்து பெய்து வரும் கடும் மழையின் காரணமாக பாக்கிஸ்தான் நாட்டின் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 33 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12,000 க்கு மேற்பட்டோர் பாரதூரமான காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், 16 இலட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும், பல்வேறு தொற்று நோய்கள் பரவியிருப்பதுடன் பல வீதிகளும் பாலங்களும் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 36 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும் 750,000 க்கு மேற்பட்ட கால் நடைகளும் தண்ணீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாகவும், ஊடகங்கள் மூலம் தெரிய வருகின்றன.



நமது இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயலுமான உதவிகளையும் உபகாரங்களையும் வழங்குவதும், அவர்களுக்காக பிரார்த்திப்பதும் இஸ்லாத்தின் வழிகாட்டலாகும். சிரமத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவி புரிவதன் ஊடாக அல்லாஹுதஆலா எமது சிரமங்களை நீக்குவான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.



'எவர் உலகத்துடைய கஷ்டத்தில் நின்றும் ஒரு கஷ்டத்தை ஒரு முஃமினிடமிருந்து நீக்குகிறாரோ அல்லாஹ் அவருடைய மறுமை நாளின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை நீக்குகின்றான். (ஸஹீஹ் முஸ்லிம்)



மஸ்ஜித்கள் சம்மேளனங்கள் மற்றும் முஸ்லிம் வர்த்தக சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து எதிர்வரும் 02 வாரங்களுடைய ஜுமுஆ வசூலை இதற்கென ஒதுக்கக் கோருவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தங்களால் முடியுமான பண ரீதியான உதவிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பின்வரும் அனர்த்த நிவாரண வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடுமாறும், இவ்விடயத்தை மஸ்ஜித் நிர்வாகிகள் கவனத்திற் கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றது.


சேகரிக்கப்படும் நிதியுதவிகள் அனைத்தும் இம்மாதத்தின் இறுதியில் இலங்கையிலுள்ள பாக்கிஸ்தானிய தூதரகத்திடம் மஸ்ஜித்கள் சம்மேளனங்கள் மற்றும் முஸ்லிம் வர்த்தக சங்கங்கள் ஆகியவைகளுடன் இணைந்து கையளிக்கப்படும் என்பதையும், தனியார் நிறுவனங்களும் அவர்களால் சேகரிக்கப்படும் நிவாரண உதவிகளை எம்முடன் இணைந்து வழங்க முடியும் என்பதையும் அறிவித்துக் கொள்கின்றோம்.



எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நமது அனைத்து நற்கருமங்களையும் அங்கீகரித்து, ஈருகிலும் சிறந்த நற்பாக்கியங்களைத் தந்தருள்வானாக! ஆமீன்.



Commercial Bank                                                             


Account Name: All Ceylon Jamiyyathul Ulama


Account number: 1901005000


Branch: Islamic Banking Unit


Swift Code: CCEYLKLX


 

Amana Bank


Account Name: All Ceylon Jamiyyathul Ulama


Account Number: 0010112110014


Branch: Main Branch


Swift Code: AMNALKLX


முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி                                                   அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்

தலைவர்                                                                            உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா                           அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


No comments

Powered by Blogger.