Header Ads



இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட, இலங்கையின் தேசிய கராத்தே அணி


பொதுநலவாய கராத்தே சம்பியன்ஷிப் 2022 இல் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தவுடன் இலங்கையின் தேசிய கராத்தே அணி நாடு கடத்தப்பட்டமை குறித்து விசாரணை நடத்த இலங்கையின் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.


தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருந்த இலங்கை கராத்தே அணியினரிடம் ஹீத்ரோ விமான நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து அவர்களது விசாக்கள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.


மூன்றாம் தரப்பினருக்கும் தற்போதைய கராத்தே சம்மேளனத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செயல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விளையாட்டு மேம்பாட்டுத் துறை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.