பயணி கொண்டுவந்த 'குஷ்' - விமான நிலைய வளாகம் முழுவதும் போதைப்பொருளின் வாசனை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் "ரெட் சேனல்" வழியாக 31 மில்லியன் மதிப்புள்ள "குஷ்" போதை பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவரை சுங்க அதிகாரிகள் புதன்கிழமை (16) அன்று கைது செய்துள்ளனர்.
தாய்லாந்திலிருந்து 50 குடைகளை வாங்கி, அவற்றில் 20 குடைகளை பொதியிலிருந்து அகற்றி, அதனை "குஷ்"போதைப் பொருளால் நிரப்பியுள்ளார்.
அவற்றை பறிமுதல் செய்து திறந்த போது விமான நிலைய வளாகம் முழுவதும் போதைப்பொருளின் வாசனை கடுமையாக பரவியது.
கைது செய்யப்பட்ட பயணி, கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

Post a Comment