தியாகியாவதற்கு முன்னரான இறுதிப் பதிவு
"காசாவின் குழந்தைகளின் பால்யகாலம் துயரம் நிரம்பியது. உலகில், தங்களின் சிறு கனவுகளுடன் வாழ விரும்பும் குழந்தைகள் அவை. அவர்களுக்கு உணவு இல்லை, கல்வியும் இல்லை. பள்ளிக்கு சென்று வகுப்பறைகளில் அமர வேண்டிய வயதில், காசாவின் குழந்தைகள் தம் தந்தைகளின் கல்லறைகளினருகே அமர்ந்திருக்கின்றனர். உலகின் பிற இடங்களில் வசிக்கும் குழந்தைகளைப் போலவே, அமைதியாக வாழ காசா குழந்தைகளும் விரும்புகின்றன. இனப்படுகொலையை நிறுத்துங்கள்!”
ஊடகவியலாளராகும் விருப்பத்தில் Palestine Chronicle பத்திரிகைக்கு பதிவுகளை கொடுத்துக் கொண்டிருந்த Llama Nasser என்கிற 11 வயது குழந்தை இஸ்ரேல் தாக்குதலில் நேற்று கொல்லப்படுவதற்கு முன் கொடுத்திருந்த பதிவு.

Post a Comment