Header Ads



சமூக ஊடகங்களின் மோசமான செயல் - அவசப்பட்டு, ஆதாரமின்றி, இட்டுக்கட்டி, ஈவிரக்கமற்று பகிராதீர்கள்


கொழும்பில் அண்மையில் இளம் பிக்கு ஒருவரும் யுவதி ஒருவரும் வீதியில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு தேரருக்கும், அந்த யுவதிக்கும் இடையில் காதல் தொடர்புகள் உள்ளதென பலரும் தெரிவித்தனர்.

தேரர் ஒருவர் காதல் வயப்பட்டமைக்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், பலரும் அவர்களை தவறான முறையில் விமர்ச்சித்திருந்தனர்.

இதுவொரு சமூக பிரச்சினையாக மாறியமையால் பொலிஸார் தலையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த புகைப்படத்தில் இருப்பவர்கள், ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரன் - சகோதரி என தெரியவந்துள்ளது. குறித்த இருவரின் தாயார் புற்றுநோய் காரணமாக மகரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாயை பார்ப்பதற்காக, அதிகாலை வீதிக்கு வந்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தவறாக சித்தரிக்கும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் மோசமாகியுள்ளதென சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  TW

No comments

Powered by Blogger.