Header Ads



குயிலின் நிலையில் ரணில், மக்களின் சேமிப்பில் 70 வீதத்தை ராஜபக்சர்கள் கொள்ளையடித்துள்ளார்கள்


 கடந்த வருடம் சேமிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவின் பெறுமதியானது இன்று 30,000 ரூபாவாக குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் வைத்து இன்று -31-கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 


குயிலுக்கு கூடு கட்ட முடியாது என்ற படியால் அது காகத்தின் கூட்டில் முட்டையிடுகிறது. காகமும், குயிலின் முட்டையை பிரித்தறிய தெரியாமல் இருக்கும் நிலையில், குயில் குஞ்சும் அந்த கூட்டிலேயே உருவாக்கம் பெறுகிறது.


எனினும் குறிப்பிட்ட காலம் வரும்போது குயில் குஞ்சை அடையாளம் காணும், காகம் அதனை கூட்டில் இருந்து விரட்டி விடுகிறது.


இதனை போன்றே ரணில் விக்ரமசிங்கவின் யோசனையும் காகத்தின் கூட்டில் இட்ட குயிலின் முட்டையை போன்று நிராகரிக்கப்படும்.


இதேவேளை கடந்த மாதத்தின் உணவுப்பணவீக்கம் 80 வீதமாக இருந்த நிலையில் இன்று மாலை இந்த மாதத்துக்கான உணவு பணவீக்கம் தொடர்பான தகவல் வெளியாகவுள்ளது.


இதன்போது உணவு பணவீக்கம் 100 வீதத்தை நெருங்கலாம். 2021ஆம் ஆண்டு ஒரு இலட்சம் ரூபாவை சேமித்த ஒருவருக்கு இன்று அந்த சேமிப்பின் மதிப்பு 30ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.


பொதுமக்களின் சேமிப்பில் 70 வீதத்தை ராஜபக்சர்கள் கொள்ளையடித்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. கலாநிதி ஹர்ஷா டி சில்வாவின் கருத்துக்கள் மிகவும் ஆழமாக சிந்திக்கத் தூண்டுபவை. ஹர்ஷாவின் பொருளாதாரக் கொள்கை நாட்டு க்கு எப்போதும் அவசியமானதும் இன்றியமையாததுமாகும்.ஆனால் துரதிருஷ்வசமாக அவருடைய கருத்துக்களை விளங்கி அவற்றை நடைமுறைப்படுத்தும் எந்த மூளையோ சிந்தனையோ அற்ற கழுதைகள் தான் பாராளுமன்றத்தில் காணப்படுகின்றனர்.அது இந்த நாட்டு மக்களின் துரதிருஷ்டவசமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.