Header Ads



சதாமியாபுரம் அல்-அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசலினால் மாணவர்களுக்கு பாராட்டு விழா

புத்தளம் சதாமியாபுரம் அல்-அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில், 08.08.2025 ஜும்ஆ தொழுகையின் பின்னர், 2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண பரீட்சையில் சிறந்த  சித்திகளைப் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்குக்கான பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.


பள்ளிவாசலின்  தலைவர் எம்.ஆர்.எம். ராபி  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில், என்.ஸைத் (ஹாஷிமி)  "கல்வியும் பண்பாடும்" என்ற தலைப்பில்  உரையாற்றினார். , அல்-அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசலின் கௌரவ செயலாளர் மபாஸ் (இஹ்யாஈ) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்வுகள் நெறிப்படுத்தப்பட்டன.


 பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர் தனவந்தர்கள் மற்றும் மஹல்லாவாசிகள் ஒத்துழைப்புடன்  இடம்பெற்றது. இது, மாணவ மாணவிகளின் எதிர்கால வாழ்வுக்கு  ஊக்கமளிக்கும் நிகழ்வாகவும், அவர்களின்  நம்பிக்கையை  உருவாக்கும் நிகழ்வாகவும் அமைந்தது.

கெளரவிக்கப்பட்ட மாணவர்கள்:

- எம்.என். பாதிமா  

- ஆர்.எப். ஷிப்னா  

- டி.ஆர்.எப். ரூமா  

- யு.எப். அஸ்லா  

- என்.ஏ.எப். ஸுஹா  

- எம்.என்.எம். நஸ்கான்  

- ஆர்.எப். ரிலா  

- எம்.ஆர்.எம். முஸ்பிக்  

- எம்.ஆர்.எம். அதீப்  

- எம்.எம். ரிப்தி

ஊடக தகவல்: அஷ்ஷெய்க் அப்துல் மலிக் (மன்பஈ)





No comments

Powered by Blogger.