Header Ads



டொய்யோ, பய்யோ என்றால் என்ன..?


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வருமானம் மற்றும் செலவு திட்டம் , டொய்யோ - பய்யோ திட்டம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் , தெரிவித்துள்ளார் . 


இலங்கையின் அரசியலில் ரணில் விக்கிரமசிங்கவை டொய்யோ என்ற அழைக்கின்றனர் . அவருக்கு தேசியத்தை பற்றி ஒன்றும் தெரியாது , அவர் சர்வதேசவாதி என்ற அடிப்படையிலேயே அவரை சிங்க அதேநேரம் மஹிந்த ராஜபக்சவை பய்யோ என்று அழைக்கின்றனர் . 


தேசப்பற்றுள்ளவர் அத்துடன் பழமைவாதி என்று கூறி அவரை பய்யோ என்று அழைக்கின்றனர் . 


இந்தநிலையில் பய்யோவும் டொய்யோவும் சேர்ந்து தற்போது வரவுசெலவுத்திட்டத்தை தயாரித்துள்ளனர் . 


எனவே இதனை டொய்பய்யோ வரவுசெலவுத்திட்டம் என்றே கூறவேண்டும் என்று இந்துனில் குறிப்பிட்டார் . 


இதேவேளை விபத்து ஒன்றில் பேரூந்தின் சாரதி குற்றவாளியாக இருந்தால் அவருக்கு தண்டனை வழங்கப்படுவதை போன்று , இந்த நாட்டில் பாரிய பொருளாதார பிரச்சினையை ஏற்படுத்திய கோட்டாபய ராஜபக்ச , அவருக்கு உதவிய , அமைச்சரவை மற்றும் பிபி ஜெயசுந்தர , மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , தண்டனை வழங்கவேண்டும் என்றும் துசார இந்துனில் கோரிக்கை விடுத்தார் . 

No comments

Powered by Blogger.