Header Ads



சுவிஸில் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் (வீடியோ)


சுவிற்ஸர்லாந்தில் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையமும், மஸ்ஜித்துல் ரவ்ளா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை, 9 ஆம் திகதி ஊர்டோப் எம்ரிசால் மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்தியாவைச் சேர்ந்த பஸீர் (மிஸ்பாஹி) பெருநாள் தொழுகையையும், பெருநாள் குத்பாவையும் நிகழ்த்தினார்.

இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்களும், ஏனைய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களும் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

பள்ளிவாசல் வளர்ச்சிக்கு தம்மால் முடிந்த உதவிகளை நல்குமாறு, இதன்போது பெருநாள் நிகழ்வுக்கு வந்திருந்தவர்களிடம், நிர்வாகத் தலைவர் ஹனீப் மொஹமட் வேண்டுகோள் விடுத்தார்.

ஹஜ் பெருநாள் நிகழ்வின் முடிவில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளும் இடமபெற்று இனிப்புப் பொதிகளும் வழங்கப்பட்டது.


No comments

Powered by Blogger.