Header Ads



மீண்டும் அமைச்சர் ஆகுவாரா நாமல்..?


எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் சில சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, எஸ்.பி.திஸாநாயக்க, சி.பி.ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகிய முன்னாள் அமைச்சர்களில் மூவருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.