Header Ads



இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக அஷ்ஷெய்க் உஸைர் மீண்டும் தெரிவு


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி அவர்கள் இரண்டாவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜமாஅத்தின் 68 ஆவது வருட அங்கத்தவர் தேசிய மாநாட்டின் போதே இத் தெரிவு இடம்பெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமியின் அமைப்புச் சட்ட விதிகளுக்கு அமைய நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தலைவர் (அமீர்) தேர்தல் இம்மாநாட்டின் பிரதான அம்சமாக அமைந்திருந்தது.

ஜமாஅத்தே இஸ்லாமி அங்கத்தவர்கள் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 30 நிலையங்களில் ஒன்று கூடி zoom தொழில்நுட்பத்தின் ஊடாக தலைமையகக் காரியாலயத்தோடு இணைக்கப்பட்டு தலைவர் தேர்தலில் தமது வாக்குகளை பதிவு செய்தனர். நேரடியாக கலந்துகொள்ள முடியாத அங்கத்தவர்கள் தனியாக இணையத்தின் மூலமாக வாக்களித்தனர்.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அடுத்து வரும் நான்கு வருடங்களுக்கான இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.எச்.எம் உஸைர் இஸ்லாஹி அவர்கள் இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்போது, கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகளின் போது ஜமாஅத்தே இஸ்லாமியின் மீது  நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தலைவர் நன்றி தெரிவித்ததோடு, இன்றுள்ள சவால்களுக்கு மத்தியிலும் ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சீர்த்திருத்த மற்றும் மனித நேயப் பணிகளை முன்னெடுப்பதற்கு தன்னால் முடியுமான அனைத்து வழிகளிலும் முயற்சிப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.

மாநாட்டில், பல்லின சமூகங்களையும் சேர்ந்த புத்திஜீவிகளும் சமூகத் தலைவர்களும் இணைந்து தமது கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

No comments

Powered by Blogger.