Header Ads



சவூதி அரேபியாவின் அனுமதியுடன், இலங்கைக்கான விமான சேவையை விரிவுப்படுத்தும் இஸ்ரேல்


இஸ்ரேலின் இரண்டாவது பாரிய விமான நிறுவனமான Arkia, தனது வான்வெளியை இஸ்ரேலிய விமான நிறுவனங்களுக்கு தடையின்றி அணுக அனுமதிக்கும் சவுதி அரேபியாவின் திட்டத்தைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்த உள்ளது.

சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கை இஸ்ரேலிய விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும், ஆசிய நாடுகளுக்கான விமான நேரத்தை குறைக்கவும் வழிவகுக்கும்.

Arkia நவம்பர் மாதம் இந்தியாவின் கோவாவிற்கு விமானங்களைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

மேலும் Airbus A321neoLR விமானத்தைப் பயன்படுத்தி இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு சேவை செய்ய பரிசீலித்து வருகிறது.

விரிவாக்கப்பட்ட சவுதி வழித்தடமானது இறுதியில் விமான டிக்கெட்டுகளை 20 சதவீதம் மலிவாக மாற்றும் என இஸ்ரேலின் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

மே மாதம் வரை 4,600 இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.