Header Ads



இலங்கைக்கு வரவுள்ள எரிபொருள், கப்பல்கள் பற்றிய விபரம் வெளியாகியது


ஒவ்வொரு கப்பலும் தலா30,000மெ.தொன் பெற்றோல்மற்றும் டீசலை தாங்கியவாறுமொத்தம் 90,000மெ.தொன்  எரிபொருளுடன் வந்தடைய உள்ளதாக அறிவிப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிக் கொண்டு 3கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூலை 13மற்றும் 14க்கிடையில் ஒரு கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது எரிபொருள் கப்பல் ஜூலை 28அல்லது 31ஆம் திகதியும் மூன்றாவது எரிபொருள் கப்பல் ஆகஸ்ட் 10அல்லது 15ஆம் திகதியும் இலங்கை வரும் எனவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

மொத்தம் 90,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் டன் எரிபொருளை தாங்கி வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, முதலாவது கப்பல் ஜூலை 13 முதல் 15ஆம் திகதிக்குள்ளும், 2ஆவது கப்பல் ஜூலை 29 முதல் 31ஆம் திகதிக்குள்ளும், 3ஆவது கப்பல் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்றும் வருகை தரும் என லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.