Header Ads



ஐரோப்பிய நாடுகளை இலங்கையின் நண்பர்களாக கருதுங்கள் - தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு


இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள தற்போதைய சூழ்நிலையில்இ இந்த கடினமான சவால் மிகுந்த நேரத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்போம் எனவும், ஐரோப்பிய நாடுகளை இலங்கையின் நண்பர்களாக கருதுங்கள் எனவும், ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய     ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்த உறுதியான செய்தியாக, சர்வதேச சமூகம் இலங்கைக்கு  உதவுவதற்கு நிச்சயமாக வழி வகுக்கும் எனவும்  தூதுக்குழுவினர்  சுட்டிக்காட்டினர்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று (24) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போது ஐரோப்பிய தூதுவர்கள் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளனர். 

நாட்டில் உணவு நெருக்கடி குறித்து கவனம் செலுத்தியுள்ள நிலையில், நாட்டின் மக்கள் தொகையில் அண்ணளவாக  90% மக்கள்  கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் 75% மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான உரம் மற்றும் எரிபொருளை வழங்குவதன் மூலம் உணவு விநியோகம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி தூதுக்குழுவிடம் தெரிவித்தார்.

அத்துடன், விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு விவசாயம் செய்யப்படாத அரச காணிகளை வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமையை கருத்திற்கொண்டு, நிரந்தர தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் மற்றும் கட்சி பேதமின்றி தூதுவர்களின் தலையீடுகள் இன்றி சட்டத்தை அமுல்படுத்துவதில் பேணப்பட்ட நியாயமான செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். 


No comments

Powered by Blogger.