Header Ads



இலங்கையர்களின் மஞ்சள் ஆடை, சர்வதேசத்தில் பேசு பொருளாகி, பாராட்டையும் பெற்றது


அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கை ரசிகர்கள் மேற்கொண்ட ஒரு செயல் சர்வதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி இலங்கைக்கு வருகை தந்த போது, அந்நாட்டு கிரிக்கட் சபை இலங்கை மக்களுக்கு நிவாரண நிதியொன்றையும் அறிவித்திருந்தது.

அத்துடன் அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள் இலங்கை வந்த பின்னர் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் டொலர் திரட்டும் பிரச்சார முயற்சியொன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் அவுஸ்திரேலிய -  இலங்கை கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கட் ​போட்டிக்கு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து வந்து அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிக்கும், அந்நாட்டுக்கும் நன்றி தெரிவிக்கும் பதாகைகளையும் ஏந்தியிருந்தார்கள்.

சர்வதேச கிரிக்கட் கவுன்சில், அவுஸ்திரேலிய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை உள்ளிட்ட சர்வதேச கிரிக்கட் அமைப்புகள் மற்றும் நபர்கள் , ஊடகங்கள் என்பன இது குறித்து பாராட்டி செய்திகளையும், பதிவுகளையும் இட்டுள்ளன.

No comments

Powered by Blogger.