Header Ads



இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி


2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் தேசிய கணக்குகள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பான முதலாம் காலாண்டுக்கான அறிக்கை அந்த திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 1.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் 4 நேர் சதவீதமாக காணப்பட்ட பொருளதார வளர்ச்சி வீதம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பணவீக்கம், அந்நிய செலாவணி மதிப்பிழப்பு, டொலர் பற்றாக்குறை போன்ற பாதகமான காரணிகளால் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்து செல்வதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.