Header Ads



நிதி மோசடி செய்துவிட்டு, இந்தியாவுக்கு ஓடியவர்கள் நாட்டிற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டனர்


இந்த நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். 


இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்த சந்தேக நபர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்

 

33, 34 மற்றும் 44 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

No comments

Powered by Blogger.