Header Ads



எனக்குப் பதவி ஆசை இல்லை, நாட்டை நிமிர்த்த முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகிச் செல்வேன்


 “நாட்டை என்னால் நிமிர்த்த முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகிச் சென்றிடுவேன்" என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மற்றவர்களை போன்று எனக்குப் பதவி ஆசை இல்லை. நாட்டின் நலன் கருதியே பிரதமர் பதவியை ஏற்றேன். அதேவேளை, ஜனாதிபதியின் வேண்டுகோளின் பிரகாரம் நிதி அமைச்சையும் பொறுப்பேற்றேன்.

நான் உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன்.

சர்வதேச நாடுகளின் முக்கியஸ்தர்களுடனும், உதவிகள் வழங்கும் சர்வதேச நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும், எதிர்கால நிலைமை குறித்தும் உண்மைத் தகவல்களையே நான் வெளியிட்டு வருகின்றேன்.

எனது கருத்துக்கள் தொடர்பில் எவரும் பதற்றம் அடையத் தேவையில்லை. நாட்டை நிமிர்த்துவதே எனது குறிக்கோள். இதை என்னால் செய்யமுடியாது போனால் பிரதமர் பதவியிலிருந்து விலகிச் சென்றிடுவேன்" என கூறியுள்ளார்.


2 comments:

  1. உமக்கு நாட்டை நிமிர்த்த முடியாது என பொதுமக்கள் குறிப்பாக உம்மைச் சேர்ந்த ஐதேக ஆதரவாளர்கள் நிரூபித்துவிட்டார்கள். அதற்குமேல் பம்போரி அடித்து மஹிந்தவை மீண்டும் பதவியில் அமர்த்தி மிஸ்டர் கபுடாஸுக்கு பதவிக்கு வர வழியமைக்காமல் தயவு செய்து இப்போதே வீட்டுக்குச் சென்றால் குறைந்து இந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு விருப்பமான ஆட்சியை அமைத்துக் கொள்வார்கள். அதற்கு தகுதியான மக்கள் இந்த நாட்டில் போதியளவு இருக்கின்றனர்.

    ReplyDelete
  2. ரணில் பிரதமராக பதவியேற்றவுடன் ஐ.அமெரிக்கா 800பில்லியன் டொலர்களும் ஜப்பான் 4பில்லியன்களும் உடனடியாக வழங்குவதாக பொய்மூட்டையை உடனடியாக அவிழ்த்துவிட்டு இப் போது எந்த நாடுகளும் எத்தகைய பணஉதவிகளும் வழங்க உறுதியளிக்கவிலலை என்ற கருத்து இப்போது பரப்பப்படுகின்றது. இந்த ரணில் கோலம் தற்போது பஞ்சத்தில் உள்ள நாட்டில் எஞ்சியுள்ள எச்சம் சொச்சங்களையும் ராஜபக்ஸ ஜுன்டாவுக்கு தாரை வார்த்துவிட்டு ஓடி ஒழியும் நிலை தான் தற்போது காணப்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.