Header Ads



வீடுகளில் இருந்து கடமையாற்றும் அரச, ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கப்படுமா..?


எரிபொருள் பிரச்சினைக்கு மத்தியில், செலவினங்களைக் குறைப்பதற்காக, அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்த வேண்டுமாயின், வீடுகளில் இருந்து கடமையாற்றும் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கப்பட வேண்டும் என அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அரச ஊழியர்களைப் பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துமாறு சில தரப்பினர் யோசனை முன்வைப்பார்களாயின், சம்பளத்தைக் குறைப்பதற்கும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என அந்த அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

எரிபொருள் உள்ளிட்ட வளங்களின் பற்றாக்குறையால், அரச செலவினங்களைக் குறைப்பதைக் கருத்திற்கொண்டு, அரச ஊழியர்களை அலுவலகத்திற்கு சேவைக்கு அழைப்பதை வரையறைக்கு உட்படுத்துமாறு அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அமைச்சின் செயலாளருக்கு, அனுப்பியுள்ள கடிதத்தில், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டீ.எஸ். ருவன் சந்ர இந்தக் கோரிக்கையை கடந்த தினம் முன்வைத்திருந்தார். 

இந்த நிலையில், வீடுகளில் இருந்து கடமையாற்றும் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். 

இதேநேரம், தற்போதைய நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு, பிரதமர் அலுவலகத்தின் செலவினங்களை 50 சதவீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதேநேரம், அரச நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 16 வாகனங்களையும், குறித்த நிறுவனங்களுக்கு மீளக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

குறைந்தப்பட்ச பணிக்குழாமினருடன், மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி, பிரதமர் அலுவலகப் பணிகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.