Header Ads



2 அரசியல்வாதிகளின் 60 பவுண் தங்கத்தையும், துமிந்தவின் கைத்துப்பாக்கியையும் காணவில்லை


நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களின் போது அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளது.

அனுமதிப் பெற்ற குறித்த கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரரால், அநுராதபுர காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது.

இதன்போது, குறித்த கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வீடு தீ வைக்கப்பட்டதால், குறித்த கைத்துப்பாக்கியும் தீயில் எரிந்து சேதமானதா என்பது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்கம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வன்முறைச் சம்பவங்களின் போது, அவரது வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தங்கம் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.