Header Ads

ராஜபக்சவினர் கொள்ளையிட்ட செல்வத்தை, உடனடியாக மீட்டு திறைசேரியிடம் கையளிக்க வேண்டும்


 தேசிய செல்வத்தை ராஜபக்சவினர் பெருமளவில் கொள்ளையிட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் இருப்பதால், கொள்ளையிட்டதாக கருதப்படும் அந்த பெருந்தொகை செல்வத்தை உடனடியாக மீட்டு, அதனை அரச திறைசேரியிடம் கையளிக்க வேண்டும் என ராமஞ்ஞை பௌத்த பீடத்தின் தென் இலங்கையின் பிரதான சங்க நாயக்கர் கலாநிதி ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது எனது அண்ணன், மகன், மருமகன், உறவினர் அல்லது நெருக்கமானவர் என கூறாமல், சுதந்திரமான நாடு பற்றி எண்ணி தனது பதவிக்கான மரியாதை மற்றும் கௌரவத்தை நினைத்து, கொள்ளையிட்டுள்ளதாக ஒப்புவிக்கப்பட்டுள்ள செல்வத்தை மீண்டும் நாட்டுக்கு பெற்றுக்கொள்ள ஜனாதிபதி தலையீடுகளை மேற்கொண்டு செயற்பட வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதான நாட்டு மக்களின் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை நாங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கூறிக்கொள்கிறோம்.


No comments

Powered by Blogger.