Header Ads



மறைந்திருந்து நாட்டையும், மக்களையும் ஆபத்தில் தள்ளாது தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழையுங்கள்

பல்வேறு வகையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே மறைந்திருந்து நாட்டையும் மக்களையும் ஆபத்தில் தள்ளாது தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்குமாறு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண  வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில் , சீனா - ஹூவான் மாநிலத்தில் உருவெடுத்த கொரோனா வைரஸ் தற்போது முழு உலகையும் அழித்து வருகின்றது. பெரும்பாலான நாடுகளில் உயிரிழப்புகள் மிக மோசமாக இடம்பெறுகின்றது. இந்த அழிவிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். 

இதுவரையில் இலங்கையில் 113 கொரோனா தொற்றிக்கு உள்ளான நோயாளிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர் . மேலும் 237 பேர் வரையில் சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இலங்கையில் கொரோனா வைரஸை பரவ விட கூடாது என்பதில் இரவு - பகல் பாராது சுகாதார பிரிவினரும் பொலிஸ் உட்பட முப்படைகளும் செயற்பட்டு வருகின்றன.

எனவே இந்த தருணத்தில் பொது மக்களின் ஒத்துழைப்புகள் மிகவும் முக்கியமானதாகும். தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேக ஏற்பட்டால் உடனே சுகாதார துறைக்கோ அல்லது அருகில் உள்ள பொலிசாருக்கோ அறிவித்து தனிமைப்படுத்தில் ஈடுப்படுங்கள். அவ்வாறு இல்லையென்றால் ஏனையவர்களுக்கு குறித்த வைரஸ் பரவ நீங்கள் காரணமாகுவீர்கள்.

நிலைமையை புரிந்துக்கொண்டு  மக்கள் செயற்பட வேண்டும். கொரோனா தொற்றுள்ளவர்கள் என சந்தேகிப்பவர்களை கண்காணிக்கவும் அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவும் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைளை எடுத்துள்ளது. தேசிய புலனாய்வு பிரிவு இதற்காக செயலி ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இலங்கை வரைப்படத்தில் நாம் சந்தேகிக்கும் நபர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை  எளிதல் கண்டறிய முடியும். புலனாய்வு பரிவினர் முழு அளிவில் கண்காணிப்பு நடவடிக்கைளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து  வருகின்றனர். வைரஸ் தொற்று குறித்து தகவல்களை மறைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.