தேங்கிக் கிடக்கும் 15 லட்சம் கடிதங்களும் பார்சல்களும்
மத்திய தபால் நிலையத்தில் சுமார் 15 லட்சம் கடிதங்கள் மற்றும் பார்சல்கள் தேக்கமடைந்துள்ளன.
19 பிரச்சினைகளை முன்னிறுத்தி தபால் ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
வேலைநிறுத்தம் காரணமாக பல தபால் நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதுவரை தங்கள் பிரச்சினைகள் குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

Post a Comment