Header Ads



வறுமையிலும் சாதிக்கும், இளைஞன் நிப்ராஸ்

இலங்கையின் அனைத்துப் பல்கலைக் கழகங்களிற்கிடையில் சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கொழும்பு பல்கலைக் கழகத்தை பிரதி நிதித்துவப்படுத்தி 800மீ,1500மீ நிகழ்ச்சிகளில் புதிய சாதனை படைத்தார். 

அண்மையில் இத்தாலி நாட்டின் நெப்போலி நகரில் நடைபெற்ற உலக பல்கலைக் கழங்களிற்கிடையிலான தடகளப் போட்டியில் 800மீ,1500மீநிகழ்ச்சிகளில் தனது அதிசிறந்த பெறுபேற்றையும் பெற்றார். 

கிழக்கு மாகாணத்தின்மூதூர் என்னும் கிராமத்தில் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து எவ்வித அடிப்படை வசதியும் அற்ற குடிசை வீட்டில் வாழ்ந்து   நாட்டிற்காக சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கின்றார். மாவட்ட,மாகாண போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி உதவி செய்யும் அமைப்புக்கள், சமூகசேவையாளர்கள்,அரசியல் சேவையாளர்கள் இந்த இளைஞரை ஊக்குவித்தால் இவரைப் பின்பற்றி பல நிப்ராஸ்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்து உருவாவர்கள் என்றால் மிகையாகாது. 

இதுவரை இவருக்கான ஊக்குவிப்புக்களையும் வழிகாட்டுதலையும் தனிமனிதனாக மனித உரிமைகள் சமாதான தூதுவர்கள் அமைப்பின் அகில இலங்கைக்கான விளையாட்டு'மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்கான இணைப்பாளர்  தேசசக்தி குணாளன் வழங்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வறுமையிலும் சாதிக்கும் இளைஞன் 

2 comments:

Powered by Blogger.