அமெரிக்காவின் தந்திரத்திற்கமைய, சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதல் நடந்தது
அமெரிக்காவின் தந்திரத்திற்கு அமைய சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
துபாய் நாட்டில் நேற்று நடைபெற்ற கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவான கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்கா உலக நாடுகளில் மத மோதல்களை ஏற்படுத்தி, அந்நாடுகளுக்குள் நுழைய முயற்சித்து வருகிறது. ஈஸ்டர் ஞாயிறு இலங்கையில் நடந்த குண்டு தாக்குதல்களை அமெரிக்க முற்றாக அறிந்திருந்தது.
சஹ்ரான் வெடிக்க செய்த குண்டின் றிமோர்ட் கொண்ட்ரோல் அமெரிக்காவின் கையிலேயே இருந்தது.
நாம் எதிர்பார்க்கும் தலைவர்களும் பயங்கரவாதிகளை கைகளில் வைத்துக்கொண்டு கொஞ்சக் கூடாது. அப்படி நடக்காவிட்டால்ட எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும். பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை பதவியை ரத்துச் செய்ய சிலர் தயராகி வருகின்றனர்.
ஒரு வேளை நிறைவேற்று அதிகாரம் இரத்துச் செய்யப்படும் 13வது திருத்தச் சட்டம் எஞ்சினால், நாடு பிளவுப்பட்டு விடும் எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment