Header Ads



இலங்கையில் தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தலாம் – எச்சரிக்கிறது அமெரிக்கா

அடுத்து வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்கப் பிரஜைகள் தமது பாதுகாப்பு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிரவாதிகள் சிறு அளவிலான தாக்குதல்களை நடத்தலாமென்றும் , பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி செயற்படுமாறும் தூதரகத்தின் செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இடங்கள், போக்குவரத்து நிலையங்கள் , சந்தைகள், வணிக வளாகங்கள், அரச அலுவலகங்கள் , ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் , உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், முக்கிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற பொதுப் பகுதிகள் தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்காக இருக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

3 comments:

  1. பியோபியா எனப்படும் மக்களைப்பயமுறுத்தி அதன் காரியங்களைச் சாதிக்கும் அமெரிக்காவின் மற்றுமொரு தந்திரோபாயம் தான் இது. தொடர்ந்தும் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தி தனது காரியங்களை இலகுவாகச் சாதிக்கும் அமெரிக்காவின் மற்றுமொரு தந்திரம் இதுவாகும். ஏற்கனவே சுயநலமும்,அதிகாரவெறியும், திமிரும் கொண்ட ஆட்சியாளர்கள் இலங்கையை அமெரிக்காவுக்கு அடகுவைத்துவிட்டார்கள். சில்லறையான சிறு சிறு பிரச்சினைகள் எஞ்சியிருக்கும். ஆனால், நாட்டை அடகுவைத்து உலகம் முழுவதிலும் இருந்து குப்பைக்கூளங்கள், பன்றித்தலை, வைத்தியசாலைகளின் கழிவுகளும், ஆபத்தான இரசாயனக்கழிவுகள், அணுஉலையின் ஆபத்தான, புற்றுநோயை விளைவிக்கும் கழிவுகள்,மலம், சிறுசீர் கழிவு மற்றும் அழிக்கமுடியாத பிலாஸ்டிக்போன்ற கழிவுகள் உற்பட அ அமரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூரின் அத்தனை ஆபத்தாக கழிவுகளும் இலங்கை ஏற்றத் தயாராகிவிட்டன, ஒட்டுமொத்தமாக அவற்றை இலங்கைக்குக்கொண்டுவந்து இலங்கை மண்ணில் புதைத்து ஆயிரக்கணக்கான மக்களை புற்றுநோய்களுக்கு ஆளாக்கும் கைங்கரியத்தை அரசின் தலைமைகள் நாட்டை முன்னேற்றும் பெயரில் ,வெற்றிகரமாக முடிந்துவிட்டார்கள். அதன் பெறுபேறுகள் விரைவில் வெளியாகும். அப்போது பந்தை மற்றவர் மீது பாஸ்பண்ணி அவர்கள் அனைவரும் தப்பிவிடுவார்கள். அப்பாவி மக்கள் அனைவரும் அதன் பேராபத்தை அனுபவிக்கவேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை.

    ReplyDelete
  2. ஏப்ரல் 21 தாக்குதலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் திட்டம் கைகூடவில்லை. வேறுவழியில் எதாவது ஒரு திட்டத்தை தீட்டுகிறார்கள்.

    ReplyDelete
  3. கிழக்கில் சரியானமுறையில் தேடுதல்கள் நடாத்தினால் ஆயிரக்கணக்கான ISIS பயங்கரவாதிகள் நிச்சயமாக பிடிபடுவார்கள்

    ReplyDelete

Powered by Blogger.