பதவி விலகுமாறு, மைத்திரி கோரிக்கை
தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன ஆகியோரை பதவிகளில் இருந்து வலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இதற்கு அமைய மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். தென் மாகாண ஆளுநரும் பதவியை ராஜினாமா செய்வார் எனக் கூறப்படுகிறது.
இந்த அளுநர்கள் தொடர்பாக மாகாணங்களின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். அது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவிலும் பேசப்பட்டுள்ளது.

மூனு மாதங்களுக்குள் ஆழுனர்கலை மாற்றும் புதிய முறையை Sri Lanka வெற்றிகரமாக பரிசிலிக்கிரது
ReplyDelete