இது பௌத்த நாடு என்று கூறிக்கொண்டு, மிகப்பெரிய அடக்குமுறை சுமத்தப்படுகிறது - மாவை சேனாதிராசா Mp
பௌத்த மதம் முதன்மையானது இதனை நாங்கள் ஒருபோதும் எற்கமாட்டோம் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, இந்திய நாடும் இலங்கையில் உள்ள இந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அடக்கு முறையை தடுத்து நிறுத்தி மதங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்
இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் எற்பாட்டில் நல்லை ஆதின முன்றலில் இடம்பேற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்தார்
பெளத்தமத ஆதிக்கத்தினால் இது பௌத்த நாடு என்று கூறிக்கொண்டு எங்கள் மீது மிகப்பெரிய அடக்குமுறை எங்கள் மீது சுமத்தப்படுகிறது ஒரு அரசனுடைய அரசியலமைப்பிலேயே பௌத்தமதம் முதன்மையானது இதனை அனைவரும் எற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்துக்கள் பரப்பப்படுகிறது இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் இந்து ஆலயங்கள் போர்க்காலத்திலும் சரி அதற்கு பின்னரும் சரி அளிக்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றது இதேபோலத்தான் தற்போது மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் நுற்றுக்கணக்கான மதங்கள் இனங்கள் பிராந்தியங்கள் இருக்கின்றபோது அங்கு இந்து மதத்தினர் பொரும்பாலாக இருந்த போதிலும் கூட இந்த நாடு மதசார்பற்ற நாடாக அரசியலமைப்பு ரீதியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த நாட்டில் பௌத்த மக்கள் பெரும்பாலாக உள்ளதனால் பௌத்த மதத்தை அனைவரும் எற்றுக் கொள்ளவேண்டும் அது தான் முதன்மை மதம் அரச மதம் எனக் கூறுவதை நாங்கள் ஏற்கமாட்டோம் மதங்கள் சமத்துவமாக இருக்கவேண்டும் மத நம்பிக்கையுள்ளவர்கள் பாதுகாக்கபப்படவேண்டும் ஆலயங்கள் பாதுகாக்கப்படவேண்டும்
இதையோட்டி நாங்கள் சர்வதேசறிதியாகவும் குறிப்பாக இந்திய நாடும் இலங்கையில் உள்ள இந்து மக்களுக்கும் இந்து ஆலயங்களுக்கும் ஏற்பட்டுள்ள அடக்கு முறையை தடுத்து நிறுத்தி மதங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்
மக்களின் விடுதலைக்காகவும் மதங்களின் சமத்துவத்திற்காகவும் தொடந்தும் நாங்கள் பாடுபடுவோம் இதற்கு அனைவரும் ஒன்றுபடுவோம் என்றார்.

Post a Comment