Header Ads



முஸ்லிம் அடிப்படைவாதிகளாலும், நாட்டுக்கு அழிவு ஏற்படும்

மாவ­னெல்­லையில் புத்தர் சிலை­களை சேத­மாக்­கிய சம்­ப­வத்தின் பிர­தான சந்­தேக நபர்­களை பொலிஸில் ஒப்­ப­டைப்­ப­தாக தெரி­வித்த மேல் மாகாண அர­சி­யல்­வா­தியை கைது­செய்ய அர­சாங்கம்  நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் புத்­த­ளத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்­களின் பின்­ன­ணியை அறிந்­து­கொள்­ளலாம். அத்­துடன் அர­சாங்கம் இதனைக் கண்­டு­கொள்­ளாமல் இருந்தால் பிர­பா­க­ரனால் நாட்­டுக்கு ஏற்­பட்ட அழிவே முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளாலும் ஏற்­படும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தேசிய அமைப்­பா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜயந்த சம­ர­வீர தெரி­வித்தார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் கட்சிக் காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், 

புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் இருந்து பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்­க­ளுடன் மாவ­னெல்­லையில் அண்­மையில் புத்தர் சிலை சேத­மாக்­கி­யவர்­க­ளுக்கும் சம்­பந்தம் இருப்­ப­தாக பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது. மாவ­னெல்லை சம்­ப­வத்தின் பிர­தான சந்­தேக நபர்கள் இரு­வரும் இன்னும் தலை­ம­றை­வாக இருக்­கின்­றனர். இவர்­களை பொஸிலிஸ் ஒப்­ப­டைப்­ப­தாக மேல்­மா­காண அர­சி­யல்­வாதி ஒருவர் கேகாலை  பொலிஸ் பிர­தா­னிக்கு அறி­வித்­தி­ருக்­கின்றார்.

ஆனால் இது­வரை அந்த சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் குறித்த அர­சி­யல்­வாதி பொலிஸில் ஒப்­ப­டைக்­க­வில்லை. அத்­துடன் புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டு­பிக்­கப்­பட்ட பாரி­ய­ள­வி­லான வெடி­பொ­ருட்­க­ளுக்கும் குறித்த இரண்டு சந்­தேக நபர்­களும் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது. அதனால் தலை­ம­றை­வாக இருக்கும் சந்­தேக நபர்­களை பொலிஸில் ஒப்­ப­டைப்­ப­தாக தெரி­வித்த மேல்­மா­காண அர­சி­யல்­வாதி யார் என்­பதை வெளிப்­ப­டுத்தி அவரை கைது­செய்­ய­வேண்டும். அதன் மூலம் சந்­தேக நபர்கள் எங்கு இருக்­கி­றார்கள் என்­பதைக் கண்­டு­பி­டிக்­கலாம்.

அத்­துடன் புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்கள் யாரு­டைய வழி­காட்­டலில் மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பதை அர­சாங்கம் உட­ன­டி­யாக கண்­டு­பி­டித்து இதனை ஆரம்­பத்­திலே நிறுத்­த­வேண்டும். இல்­லா­விட்டால் விடு­த­லைப்­பு­லி­களால் நாடு எதிர்­கொண்ட அழிவை முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களால் எதிர்­கொள்ள நேரிடும். அத்­துடன் புத்­த­ளத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்­க­ளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கும் தொடர்­பி­ருக்­கின்­றதா என்­பதை தேடிப் பார்க்­க­வேண்டும். இது­தொ­டர்­பாக தமிழ், முஸ்லிம் மக்கள் அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும். கலே­வல பிர­தே­சத்­தைச்­சேர்ந்த நபர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து அண்­மையில் உயி­ரி­ழந்தார்.

நாட்டில் கடந்த காலங்­களில் அளுத்­கம, திகன, அம்­பாறை போன்ற பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற இன­வாத சம்­ப­வங்கள் மற்றும் மாவ­னெல்லை புத்­தர்­சிலை சேத­மாக்­கிய விட­யங்கள் அனைத்தும் ஒரே நோக்­கத்­திலே இடம்­பெற்­றுள்­ளன. இது தொடர்­பாக அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும்.

அத்துடன் இந்த அரசாங்கம் அடிப்படை, பிரிவினைவாதத்துக்கு துணைபோகும் அரசாங்கமாகும். அடிப்படைவாதத்துக்கு அரசாங்கம் அச்சப்படுகின்றது. அதற்கு எதிராக ஒருபோதும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது. அவ்வாறு இல்லை என்றால் மேல்மாகாண அரசியல்வாதியை கைது செய்து அடிப்படைவாதிகள் தலைதூக்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
-Vidivelli

5 comments:

  1. காத்தான்குடியில் ஒரு தேடுதல் நடாத்தினால் இன்னும் பல ஆயுதங்கள் வெளிவரும்

    ReplyDelete
  2. Yes.. Police should call Ajan... since he says statement like this... he can show the places .. if not put him in correct place for talking of unknown matter.

    ReplyDelete
  3. இலங்கையில் முஸ்லீம் அடிப்படைவாதம் என்கிற போர்வையில் தொழிற்படுவது தமிழ் பயங்கரவாதம். வியாழேந்திரன், கோடீஸ்வரன் போன்ற காட்டிக்கொடுத்த கிழக்கானுங்களை விசாரித்தால் பல விடயங்கள் வெளிவரும்

    ReplyDelete
  4. நாகரீகமற்ற comments களை பதிவிடுவதன் மூலம் நாகரீகமற்ற முஸ்லீங்களை உருவாக்குவதில் jaffna Muslim media வுக்கும் பெரும் பங்குண்டு எனபதனை மறந்து விட வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.