Header Ads



அரசியல் இலாபம் தேடவே, சிறைக்குச்சென்று சிலர் ஞானசாரரை சந்திக்கின்றனர்


இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது, ஞானசார தேரரை கைதுசெய்து சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை நியாயமற்றது என சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மகல்கந்த சுதத்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தர்ம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

எனினும், இராணுவ வீரர்கள் பற்றி கருத்துத் தெரிவித்த ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது நியாயமற்றது ஒரு செயலாகும். ஞானசார தேரரை அரசியல் கைதியைப்போன்று சித்தரித்து சில அரசியல்வாதிகள் அவரைக் கொண்டு அரசியல் நடத்துகின்றனர்.

எவ்வாறாயினும், சிறைச்சாலையில் அவரை சிலர் சென்று சந்திப்பதன் நோக்கம் அவரது விடுதலையை வலியுறுத்துவதற்காக அல்ல.

மாறாக இந்த விடயத்தைக் கொண்ட அரசியல் இலாபம் தேடவே முற்படுகின்றனர் என்றார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. சாலியை காப்பாற்றுவதில் என்ன அக்கறை பாருங்க

    ReplyDelete

Powered by Blogger.