பெப்ரவரி 4 இல் ஜனாதிபதியால், ஞானசார விடுதலை செய்யப்படுவார் - துமிந்த
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தோ ஞானசார தேரர், பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, ஜனாதிபதியால் விடுதலை செய்யப்படுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி துமிந்த திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள தேரரை, நேற்று சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேரரின் விடுதலை குறித்து, ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.
நாட்டு மக்களுக்காகவும் சிங்கள பௌத்தர்களுக்காகவும், பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காகவும் என்று, அவர் செய்த சேவைகளைக் கருத்தில் கொண்டு, சுதந்திர தினத்தன்று, அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Please release our Potta Nowfer also along with this terror monk.. Because both of them are almost same.. but this terror MONK is most dangerous than Potta Nowfer...
ReplyDelete..Also consider releasing many of our criminals.. They are very innocents same like our Terror MONK. Crazy....
CRAZY.... Dirty Politician's... Destroying the Country.
President,try to win Buddhist votes in next general elections.By releasing him
ReplyDelete