ஜனாதிபதி சிறைக்குச் செல்ல, நேரிடுமென எச்சரிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறை செல்லக்கூட நேரிடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் இன்று -05- ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது சொந்த சொத்தை பங்கிடுவது போல்தான் அரசாங்கத்தை செயற்படுத்தி வருகிறார்.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. எனவே, அவர் சிறை செல்லக்கூட நேரிடும்.
மைத்திரிபால சிறிசேன காலையில் கூறும் கருத்தை இரவிலேயே மாற்றி விடுகிறார். இரவில் கூறியதை காலையில் மறந்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரச்சினையைத் தோற்றுவித்தவரே, இன்னும் சில நாட்களில் பிரச்சினைத் தீர்ந்துவிடும் எனக் கூறுகிறார். இவையெல்லாம் மிகவும் வேடிக்கையானது என்றும் கூறியுள்ளார்.
மேலும், இவரை பொது வேட்பாளராக கொண்டுவந்து கட்சியும் நாடும் அழிந்துவிட்டது. இது ஒரு சிறந்த பாடம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

உண்மை உண்மை மறுக்க முடியாத உண்மை!
ReplyDelete