Header Ads



கல்கிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் மரணம்

கொழும்பு புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ - கல்தேமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. 30 வயதான இளைஞர் ஒருவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.