Header Ads



பாபரி மஸ்ஜித் மீட்டெடுக்கப்படும்வரை, போராட்டத்தை நாங்கள் தொடர்ந்துகொண்டே இருப்போம்...

பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் தவறு என்று நீங்கள் சொன்னால். எங்களது உடம்பில் மூச்சு காற்று இருக்கும் வரை அந்த தவறை செய்வோம். பாபரி மஸ்ஜித் மீட்டெடுக்கப்படும் வரை போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டே இருப்போம்.


பள்ளிவாசல் என்பது அது எப்போதும் பள்ளிவாசல் தான்.அது அல்லாஹ்வுக்கு சொந்தமானது.
கண்ணியமிக்க அல்லாஹ்வின் கூற்று :
*"நிச்சயமாக பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரித்தானவை"*
அல்குர்ஆன் 72:18
எனவே அதை மீட்டெடுக்கும் பொறுப்பை துறந்து விடுவதற்கு எந்த ஒரு முஸ்லிமுக்கும் அனுமதி இல்லை. அதை மீட்டெக்க அனைத்துவிதமான மதிநுட்பம் வாய்ந்த முயற்சிகளிலும் ஈடுபடுவது முஸ்லிம்கள் மீது கட்டாயமாகும்.
முஸ்லிம்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி பலனொன்றையும் அளிக்காக உணர்ச்சிள் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் சரியாக அமையாது.
நஷ்டத்தை தவிர்ப்பதில் முடிந்த அளவு கவனமாக இருக்க வேண்டும். நஷ்டத்தை தவிர்க்கும் அதே நேரத்தில் தளர்வடையாத நீண்ட கால முயற்சியை இத்திசையில் மேற்கொண்டாக வேண்டும்.
நிச்சயமாக ஒருநாள் வெற்றி கிடைத்தே தீரும்.அது கிடைப்பதற்கு சற்று தாமதமானாலும் இடைவிடா முயற்சிக்கான நன்மை அனைவருக்கும் கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
*முஷ்ரிகுகள் இறையில்லம் கஃபாவை சிலைவழிபாடு கூடமாக மாற்றி வைத்திருந்தார்கள்.அதை மீட்டெடுக்க அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு இறுதியில் அதில் வெற்றியும் கண்டார்கள்.*
*அல்லாஹ்வின் தூதரிடத்தில் தான் உங்களுக்கான அழகிய முன்மாதிரி உள்ளது.*

இப்படிக்கு :
*மௌலானா ஸஃபர் ஆலிம் நத்வி*,
தாருல் இஃப்தா நத்வதுல் உலமா,

மௌலானா நாஸிர் அலி,
தாருல் இஃப்தா,நத்வதுல் உலமா,லக்னோ.

No comments

Powered by Blogger.