Header Ads



கடைசி நேரத்திலேயே ரணில் பங்கேற்பதாக முடிவு - அலட்சியம்செய்த மைத்திரி

மைத்திரிபால சிறிசேன நேற்று அதிபர் செயலகத்தில் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தான் பதவி நீக்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலட்சியம் செய்யும் வகையில் நடந்து கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், சிறிலங்கா பிரதமர் மைத்திரிபால சிறிசேன, ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும்  கட்சியின் மூத்த தலைவர்களுடன் இயல்பான முறையில் பேசினார்.

அவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். எனினும், ரணில் விக்கிரமசிங்கவுடன், அவர் பேசவில்லை.

ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கருத்துக்களுக்கும் பதிலளிக்காமல் தவிர்த்துக் கொண்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நேற்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் சஜித் பிரேமதாசவே ஐதேக தரப்பில் கலந்து கொள்வதாக இருந்தது.

எனினும் கடைசி நேரத்திலேயே ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பதாக முடிவு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பில், சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டார்.

No comments

Powered by Blogger.