Header Ads



நேற்று இரவிரவாக, கட்சிகள் ஆலோசனை

நேற்று மாலை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர், இரண்டு பிரதான கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்றிரவு கூடி ஆராய்ந்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுவின் கூட்டம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

அதிபர் செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்றிரவு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கினார்.

இதன் போது, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு கட்சிகளும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

No comments

Powered by Blogger.