அலரி மாளிகையில், வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் ரணில் அவசர பேச்சு
வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலரி மாளிகையில் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் இணக்கப்பாடு இன்றி முடிவடைந்த நிலையில் இவ்வாறான பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.
மேலும், இதற்கு முன்னரும் இரு தடவைகள் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment