இன்றைய சர்வகட்சி கூட்டத்தில், நடந்து என்ன..?
“ நீங்கள் பொருத்தமான பிரதமர் ஒருவரை தெரிவு செய்யுங்கள்.பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின்படி செயற்பட்டு ஒரு முடிவைக் காண்போம் ” இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவை முன்னே வைத்துக் கொண்டு இன்றைய சர்வகட்சி கூட்டத்தில் அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரி...
“ பாராளுமன்ற கூட்ட தொடரை நான் ஒத்திவைக்க மாட்டேன்... ஆனால் இப்போதுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண பல யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு நான் முன்வைத்துள்ளேன். ஆனால் அவை ஒன்றும் நிறைவேறவில்லை.. நான் சொன்னபடி கூட பாராளுமன்றத்தில் எதுவும் இடம்பெறவில்லை. புதிய பிரதமர் ஒருவரை தெரிவு செய்து பாராளுமன்ற ஒழுங்குகளின்படி செயற்படுங்கள்”
என்று இன்றைய கூட்டத்தில் கருத்து வெளியிட்டார் ஜனாதிபதி..
பாராளுமன்றத்தில் மீண்டும் பெரும்பான்மையை காட்ட நாளை நடவடிக்கை எடுக்கப்படுமென ரணில் இந்த கூட்டத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளார்..
இங்கு கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச ,
தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பற்றி சபை ஒழுங்குப்பத்திரத்தில் கூட இல்லையென சொன்னதுடன் அப்படியாயின் எப்படி இவர்கள் சபை நியமங்களின்படி நடந்தார்கள் என்று நம்புவது என்று கேள்வியெழுப்பினார்...
நாளை 113 எம் பிக்கள் பட்டியலை அந்த எம் பிக்கள் சகிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு கொண்டு வந்து தரமுடியும் என்ற ஐ தே கவின் யோசனை இங்கு ஜனாதிபதி தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை..
அதேசமயம் முடிந்தால் 113 எம் பிக்களின் கையொப்பங்களை சமர்ப்பிக்குமாறு விமல் வீரவன்ச எம் பி இங்கு சவால் விடுத்தார்...
கூட்டம் முடிந்த சமயம் மஹிந்த ராஜபக்சவுடன் அளவளாவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், “விஷ் யூ ஹெப்பி பேர்த் டே ” என்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினார்...
-Sivaraja

Post a Comment