எம்மிடம் 113 இல்லாவிட்டால் ஏன், அராஜகத்தை மேற்கொள்ள வேண்டும் - கொதிக்கிறார் - குமாரவெல்கம.
பாராளுமன்றில் 113 பெரும்பான்மை இல்லாவிட்டால் ஜனநாயக முறையில் ஆட்சியை வழங்கிவிட்டுச் செல்ல வேண்டும். எம்மிடம் பெரும்பான்மை இல்லாவிட்டால் ஏன் அராஜகத்தை மேற்கொள்ள வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ அணியின் குமாரவெல்கம எம்.பி. தெரிவித்தார்.
பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பாராளுமன்றில் ஒழுக்கமற்ற வகையில் நடந்துகொள்வதை பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் அவதானித்ததோடு தமது தொலைபேசிகளில் பதிவு செய்தும்கொண்டிருந்தனர்.
இவற்றை அனைத்தையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். எமது நாடு தொடர்பில் தவறான நிலைப்பாடு ஏற்படும். இலகுவான முறையில் தீர்த்துக்கொள்ளக் கூடிய பிரச்சினையை இவ்வாறு நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்வதால் என்ன பயன்?

மஹிந்த அணியில் இப்படியும் ஒரு நல்ல மனிதரா? உங்களது நேர்மையான அரசியலுக்கு வாழ்த்துக்கள் அய்யா.
ReplyDeleteHe is critical about this whole episode and against MR family trying to dominate the SLFP/SLPP
ReplyDeleteitha konjam kelattu dinesuku sollunga sir....
ReplyDelete