Header Ads



பொலிஸ் மா அதிபருக்கு அரசியலுக்கு, வரும் தகுதிகள் இல்லை - ரஞ்சித் மத்துமபண்டார

எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் தொடர்பாக இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் , எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக பொலிஸ் மா அதிபரை நிறுத்த தயார் நிலைகள் எதுவும் இருக்கின்றதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“பொலிஸ் மா அதிபர் பாடவும், உரையாற்றவும் சிறந்த இயலுமை இருக்கின்றது. எனினும் அரசியலுக்கு வரும் தகுதிகள் அவருக்கு இல்லை.

இலங்கையில் எப்போதும் இறுதி சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் இதனை தெளிவாக எடுத்துக்காட்டியது.

எனினும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்பதில் பிரச்சினைகள் இருக்கின்றன. நிறுத்தப்படும் வேட்பாளர் ராஜபக்ச குடும்பத்தினர் ஒருவராக இருப்பாரா என்பதில் பிரச்சினை காணப்படுகிறது.

ஐக்கிய தேசியக்கட்சியில் எவரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியும் எனவும் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.