பிரதமருக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் - விசாரணை ஆரம்பம்
சுப்ரீம்செட் திட்டம் தொடர்பாக, பிரதமர் ஹரிணிக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் வருமானம் குறித்த தகவல்களை, பிரதமர் ஹரிணி அமரசூரிய சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
பின்னர், பிரதமருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் தவறானவை என்று கூறி, அமைச்சர் வசந்த சமரசிங்கவால் அந்த புள்ளிவிபரங்கள் திருத்தப்பட்டன. பிரதமருக்கு தவறான புள்ளிவிபரங்களை வழங்கிய அதிகாரிகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் வசந்த சமரசிங்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படும்போது, சரியான தகவல்களை வழங்குவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும்.
இருப்பினும், இந்த பிழை காரணமாக, இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக தான் ஒரு அறிக்கையையும் வெளியிட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Post a Comment