மினுவங்கொடயில் துப்பாக்கிச் சூடு
மினுவங்கொட, கொட்டுகொட பகுதியில் இன்று (13) இருவரினால், திலீப லக்மால் என்ற 'பஸ் திலீப' என்பவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அவரது 2 பிள்ளைகளின் முன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதோடு, சூடு நடத்தியவர்கள் படையினர் பயன்படுத்தும் சீருடைகளை ஒத்த ஆடைகளை அணிந்திருந்ததாக வீட்டார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்த பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சி அருகிலுள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், 2025 ஆம் ஆண்டில் இதுவரையில் 80 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு, இதில்44 பேர் மரணித்துள்ளனர். மேலும் 47 பேர் காயமடைந்துள்ளனர்.

Post a Comment