Header Ads



முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு 2 வாரகால அவகாசம், தீர்வு கிடைக்காவிடின் போராட்டம்


ஜனா­தி­ப­தியின் வில்­பத்து வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்பில்  ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருக்கும் முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் ஜனா­தி­ப­தியின் செய­ல­கத்தில் பேச்­சு­வார்த்­தை­யொன்று நடை­பெற்­றது. 

பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்ட சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் ‘முஸ்­லிம்கள் இப்­பி­ரச்­சி­னையை அமை­தி­யாகத் தீர்த்துக் கொள்­வ­தற்கே எதிர்­பார்க்­கின்­றனர்.

அதனால் 2012 ஆம் மற்றும் 2017 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட வன பிர­க­டன வர்த்­த­மானி அறி­வித்­தல்­களை இரத்துச் செய்ய வேண்டும். அப்­பி­ர­தேச மக்­களின் காணி­க­ளுக்கு உத்­த­ர­வாதம் வழங்க வேண்டும். இதற்­கென்று ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மித்து மக்­களின் கருத்­து­க­ளையும் பெற்று தீர்­வுகள் வழங்­க­வேண்டும் என்று ஜனா­திப­தியின் செய­லா­ள­ரிடம் கோரிக்கை விடுத்­தனர்.

இவ்­வி­வ­கா­ரத்­துக்கு இன்னும் இரு வாரங்­களில் உரிய தீர்வு பெற்­றுத்­த­ரப்­பட வேண்டும். இல்­லையேல் நீதி வேண்டி நீதி­மன்­றத்தை நாட­வுள்­ள­தா­கவும் நாடு தழு­விய ரீதியில் பரந்த போராட்­டங்­களை நடத்­த­வுள்­ள­தா­கவும் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர். 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரி­விக்­கையில்;

 'யுத்தம் முற்­றுப்­பெற்று எட்டு வரு­டங்கள் கடந்து விட்­டன. என்­றாலும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் இன்னும் முகாம்­களில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அவர்­களை மீள் குடி­யேற்­றாது இவ்­வா­றான வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­டு­வது தவ­றாகும். இது பாதிக்­கப்­பட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வர்த்தமானி அறிவித்தலை உடன் இரத்துச்செய்து சுயாதீன ஆணைக்குழு அமைத்து ஆராயப்பட வேண்டும்' என்றார். 

முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ்விவகாரத்தை சுமுகமாகத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கியுள்ளனர். இரண்டு வாரகாலத்துக்குள் தீர்வு கிடைக்காது விடின் நாடெங்கும் போராட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.     

1 comment:

  1. கண் தெரியாத குருடும் காடு கேளாத செவிடும் கலந்த அரசாங்கத்துக்கு இரண்டு வாரம் அதிகம் ஆரத்தீர விசாரிக்காமல் வர்த்தமானி அறிவித்தலை பிரயாணத்தில் செல்லும்போது கையழுத்து விடும் இவர்களுக்கு எதற்கு இரண்டு வாரம்.உடனடியாக நாடு தழுவிய போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.அவ்வாறு நாம் போராட ஆரம்பித்தால் இந்த அரசுக்கு எதிரான மனச்சாட்சி யுள்ள பெரும்பான்மை மக்களும் நம்மோடு சேர்ந்து போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.மஹிந்த முஸ்லிம்களுக்கு எதிரியாக செயல் பட்டார் ஆனால் இந்த அரசாங்கம் துரோகியாக செயல் படுகின்றது.எதிரியை நம்பினாலும் துரோகியை நம்பக்கூடாது.இந்த அரசு அன்று வெற்றி பெறாமல் இருந்து இருந்தால் வர்த்தமானி அறிவித்தல் விடும் இவர்கள் இன்று ஆறடி நிலத்துக்குள் பொய் இருப்பார்கள் அல்லது சிறைச்சாலைகளில் முடங்கி கிடப்பார்கள் இதை எல்லாம் மறந்த துரோகிகளுக்கு இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை உடனடியாக நாடு தழுவிய போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.