முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு 2 வாரகால அவகாசம், தீர்வு கிடைக்காவிடின் போராட்டம்
ஜனாதிபதியின் வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் ஜனாதிபதியின் செயலகத்தில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ‘முஸ்லிம்கள் இப்பிரச்சினையை அமைதியாகத் தீர்த்துக் கொள்வதற்கே எதிர்பார்க்கின்றனர்.
அதனால் 2012 ஆம் மற்றும் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வன பிரகடன வர்த்தமானி அறிவித்தல்களை இரத்துச் செய்ய வேண்டும். அப்பிரதேச மக்களின் காணிகளுக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். இதற்கென்று ஆணைக்குழுவொன்று நியமித்து மக்களின் கருத்துகளையும் பெற்று தீர்வுகள் வழங்கவேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இவ்விவகாரத்துக்கு இன்னும் இரு வாரங்களில் உரிய தீர்வு பெற்றுத்தரப்பட வேண்டும். இல்லையேல் நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் நாடு தழுவிய ரீதியில் பரந்த போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்;
'யுத்தம் முற்றுப்பெற்று எட்டு வருடங்கள் கடந்து விட்டன. என்றாலும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை மீள் குடியேற்றாது இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவது தவறாகும். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே வர்த்தமானி அறிவித்தலை உடன் இரத்துச்செய்து சுயாதீன ஆணைக்குழு அமைத்து ஆராயப்பட வேண்டும்' என்றார்.
முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ்விவகாரத்தை சுமுகமாகத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கியுள்ளனர். இரண்டு வாரகாலத்துக்குள் தீர்வு கிடைக்காது விடின் நாடெங்கும் போராட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கண் தெரியாத குருடும் காடு கேளாத செவிடும் கலந்த அரசாங்கத்துக்கு இரண்டு வாரம் அதிகம் ஆரத்தீர விசாரிக்காமல் வர்த்தமானி அறிவித்தலை பிரயாணத்தில் செல்லும்போது கையழுத்து விடும் இவர்களுக்கு எதற்கு இரண்டு வாரம்.உடனடியாக நாடு தழுவிய போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.அவ்வாறு நாம் போராட ஆரம்பித்தால் இந்த அரசுக்கு எதிரான மனச்சாட்சி யுள்ள பெரும்பான்மை மக்களும் நம்மோடு சேர்ந்து போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.மஹிந்த முஸ்லிம்களுக்கு எதிரியாக செயல் பட்டார் ஆனால் இந்த அரசாங்கம் துரோகியாக செயல் படுகின்றது.எதிரியை நம்பினாலும் துரோகியை நம்பக்கூடாது.இந்த அரசு அன்று வெற்றி பெறாமல் இருந்து இருந்தால் வர்த்தமானி அறிவித்தல் விடும் இவர்கள் இன்று ஆறடி நிலத்துக்குள் பொய் இருப்பார்கள் அல்லது சிறைச்சாலைகளில் முடங்கி கிடப்பார்கள் இதை எல்லாம் மறந்த துரோகிகளுக்கு இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை உடனடியாக நாடு தழுவிய போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
ReplyDelete